கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் ,குஷ்பூ ,மீனா நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியாகிய "நாட்டாமை" படம் குறித்து இயக்குநர் தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அந்த காலத்தில் ஆர்.பி சௌத்திரி இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் சுமார் 55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை படக்குழுவிற்கு பெற்று கொடுத்தது.
இந்த படத்தின் பாடல்கள் ஒரு சில வரிகள் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது. மற்றும் இந்த படத்தில் மனோரம்மா ,கவுண்டமணி ,செந்தில் ,விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் மிக்சர் மாமா கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக காணப்படுகின்றது.
குறித்த நேர்காணலில் இயக்குநர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் குறித்து 'நாட்டாமை' படத்தில் மிக்சர் மாமா கேரக்டராக நடித்தவர் என் படத்தில் பணியாற்றிய எலெக்ட்ரீசியன். புக் படிப்பது, லைட் ஆன் செய்வது என இருந்த இடத்தை விட்டு நகராமல் உட்கார்ந்திருப்பார். எழுந்து நின்னு வேலை செய்ய சொன்னால், நான் எலக்ட்ரீசியன் சார் எலக்ட்ரிக்கல் வேலை வந்தால் சொல்லுங்க என்று சொல்வார். இதை மனதில் வைத்துக் கொண்டு அந்த காமெடி சீன் எடுக்கும் போது அப்பா கேரக்டர் வைத்து இனிஷியல் பற்றி சொல்லலாம் என முடிவெடுத்து அந்த எலக்ட்ரீசியனைக் கூப்பிட்டேன். அவரிடம் மிச்சரைக் கையில் கொடுத்து உட்காரச் சொன்னேன். அந்தக் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை அவரின் காட்சியை மீம்ஸ்களாக பார்த்து வருகிறேன். இவ்வாறு பேசியுள்ளார்.
Listen News!