• Dec 26 2024

"டேய்.. இங்கையுமா டா... இதுதான் Hero Sofa சூப்பர் Quality... வேற எங்கேயுமே கிடைக்காது... LIC படப்பிடிப்பில் SOFA BOY அலப்பறை...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சென்னையில் சில வாரங்களுக்கு முன் புயல் ,மழை என அனைவரும் தவித்து கொண்டிருந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வந்தது அதாவது மழையில் நனைந்து உங்கள் வீட்டு சோபா எல்லாம் நனைந்து இருக்கும் குறைந்த விலையில் எங்க கிட்ட வாங்கலாம் வாங்க என்று முகமது ரசூல் என்ற பையன் வீடியோ வெளியிட்டு இருந்தான். 


அந்த வீடியோ வைரலாகவே அந்த பையன்னும் ஒரே நைட்டில் ஒபாமா ஆனது போல இணையத்தில் வைரலாகிவிட்டான். அதன் பிறகும் பல வீடியோக்கள் வெளியிட்ட அந்த பையனுக்கு தற்போது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து வைரல் சிறுவன் பெஸ்ட் பிரைஸ்சில் சோபா தருகிறேன் என ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். 


அந்த வீடியோவில் அந்த சிறுவன் கூறியதாவது " இப்போ நாங்க LIC மூவி ஷூட்டிங் இடத்தில் இருக்கோம். இங்க இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் பிரதீப் ரங்கநாதன், கேமரா மேன் எல்லாரும்  இருக்காங்க எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்து இருக்காங்க அவங்கள வித்துகாட்டவாம் சரி வாங்க வாங்கலாம் என்று கூறினார்.


பிறகு விக்னேஷ் சிவன் அருகில் சென்று "இதுதான் டேரெக்டர் சோபா இது நல்லா கதை எழுதும், படம் எடுக்கும் ,ஆக்சன் சொல்லும் ' அடுத்து இது ஹீரோ சோபா இது நடிக்கும் ,சண்டை போடும் , கதை கேட்டு அத அப்படியே பண்ணும் அதுல இல்லாததையும் பண்ணும் என்று பிரதீப் ரங்கநாதனை பார்த்து கூறினார்.


பிறகு இது கேமரா மேன் சோபா இது படம் எடுக்கும் அப்டியேத்தான் இருக்கும், இது ஹீரோயினி சோபா இது நடிக்கும், ஹீரோவோட  டான்ஸ் ஆடும், இது காமெடியன் சோபா இது காமெடி மட்டும் தான் பண்ணும் நல்ல பண் சோபா என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இது எல்லாமே மூவி சோபா எல்லாம் வேணும்னா LIC மூவி பாருங்க என்று கூறி காமெடியாக வீடியோ ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement