• Dec 25 2024

தப்பான முடிவெடுத்த முத்து... மீண்டும் சிக்கலில் மாட்டிய பாக்கியா... ராஜீயை விட்டு செல்லும் கண்ணன்... இனி நிகழ போவது என்ன...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.


கதவை மூடிவிட்டு உள்ளே சென்ற முத்துவை கோபி மற்றும் குடும்பத்தார் கதவை திறக்குமாறு தட்டுகின்றனர். பிறகு கதவை தள்ளி திறந்து உள்ளே போக முத்து தற்கொலை செய்வதற்காக கயிறை கட்டி கழுத்தில் போட்டு கொண்டு இருக்கிறார். உடனே சென்ற கோபி அவரை தடுத்து நிறுத்த உள்ளே வந்த குடும்பத்தினர் ஆறுதல் கூறி அழுகின்றனர். உங்க பாசத்தை ராஜீ புரிஞ்சிக்க இல்ல அதுக்காக நீங்க குடும்பத்தை பத்தி யோசிக்காம இப்படி செஞ்சி இருக்க கூடாது என்று கோபி கூறுகிறார். அதன் பிறகு முத்துவின் மனைவியும் நீங்க இப்படி இறந்துட்டா நானும் உயிரோட இருக்கமாட்டேன் என்று சொல்லி அழுகிறார்.


மற்ற ஒரு பக்கம் பாக்கியா செழியன், எழில் மூவரும் கோவில் உள்ளேயிருந்து வெளியே வர செழியனின் பாட்டி கோபமாக இருந்து என்னை அத்தை என்று கூப்பிடாத பாக்கியா என்று கடும் கோபமாக கூறிவிட்டு செழியனை கூட்டி கொண்டு வீட்டுக்கு செல்கிறார். ராதிகா தனது அம்மாவிற்கு கால் பண்ணி அங்கு நடந்த விடயங்களை சொல்கிறார் அப்போது பாண்டியன் ராதிகாவிடம் தயங்கி தயங்கி வந்து பேசலாம்னு தெரிய இல்ல ஆனா கஷ்டம்னு வந்தா பாத்துட்டு இருக்க முடியாது உள்ளே ஒரே சத்தமா இருந்தது ஏதாவது நடத்துட்டுதா என்று கேட்கிறார். ராதிகா நடந்த விடையங்களை பாண்டியன் கிட்ட சொல்லுறாங்க.


அப்போ பாண்டியன் என்னோட பசங்களும் ராஜீய தேடித்தான் போய் இருக்காங்க. ஏதாவது தகவல் கிடைச்சிச்சா என்று கேட்கிறார் ராதிகாவும் இன்னும் இல்ல எல்லாரும் தேடிட்டு தான் இருக்கோம் என்று கூறுகிறார். முத்துவின் தம்பியை பார்த்து அவர் பல கஷ்டத்தை பார்த்தவரு அவர் கூடவே இரு என்று கூறுகிறார்.


செலியனிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டு போகும் ஜெனியின் அப்பா செழியனை திட்டி கொண்டு செல்கிறார். அப்போ ஜெனி அப்பா இந்த ஞானஸ்தானம் நடக்க கூடாது எல்லாறையும் கஷ்டப்படுத்திட்டு இந்த பன்சன் இப்போ நடக்க கூடாது என்று சொல்கிறார். அதன் பிறகு பன்சனும் கென்சல் ஆகிவிட்டது.

பாக்கியா இன்னும் கொஞ்சம் பேருக்கு அதிகமா சமைக்க வேண்டும் என்பதற்காக தானும் இருந்து இரவு சாப்பாடு செய்றாங்க அந்த பக்கம் ராஜீ வீட்டை நினைத்து அழுது கொண்டு இருக்கிறாள். கண்ணா உன் போனை கொடு ஒருக்கா நான் கால் பண்ணி கதைக்கிறேன் என் பிரன்ஸ் கிட்ட சரி பேசுறேன் என கூறுகிறார். அதற்கு கண்ணன் கோபமாக கத்திவிட்டு வெளியே போய் விடுகிறார்.    

Advertisement

Advertisement