• Dec 26 2024

மதம் மாற இது தான் முக்கிய காரணம்.. எனக்கு 10 ஆண்டுகள் எடுத்தது! ஏ.ஆர்.ரஹ்மான் அக்கா சொன்ன சீக்ரெட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் போற்றும் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலம், அராபிக் மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக திகழும் இவர் இஸ்லாமிய மதத்தின் மீது ஆன்மீக ரீதியாக பற்றுக்கொண்டவர். 

ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது தந்தை சேகர் உடல்நலக்குறைவால் இருந்தபோது தர்ஹாவுக்கு சென்று வேண்டியதில் உயிர் பிழைத்து சில காலம் உயிரோடு வாழ்ந்தார். 


இதனால் இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை பெருகி இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக கூறப்பட்டது.. அதனால் ஏ.ஆர்.ரஹ்மான் என்று பெயர் வந்தது. அவர் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இஸ்லாம் மதத்துக்கு மாறியது. 

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தாயும், ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காவுமான ரைஹானா நாம் எதனால் மதம் மாறினோம் என பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில,

எனது தந்தை இறந்துபோன பிறகு எங்கள் குடும்பம் பல கஷ்டங்களை சந்தித்தது. அந்த சமயத்தில் சூஃபிஸத்தில் எனது தாய் ஈர்க்கப்பட்டார். பிறகு முழு குடும்பமும் மாறியது.

ஆனால் நான் மதம் மாற பத்து வருடங்கள் எடுத்தது. ஏனெனில் எல்லா சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து 5 வேளை நமாஸ் செய்யும் பழக்கம் பெற 10 வருடங்கள் எடுத்தது..

மேலும், எனது பெயரை மாற்ற வேண்டிய நிலையில், ஷனாஸ் என்று வைக்க நினைத்தேன். ஆனால் ரைஹானா பெயர் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை வைத்துக்கொண்டேன். என்றார்.

Advertisement

Advertisement