• Dec 26 2024

தமிழ் நாட்டின் நம்பர் ஒன் பீடை பிடித்த சீரியல் இது தான்! சன் டிவி சீரியலை கிழித்து நொறுக்கும் நெட்டிசன்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கு பெயர் போனவை தான் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்.

இந்த மூன்று தொலைகாட்சி சீரியல்களுக்கும் தனித் தனியாக ரசிகர் கூட்டம் காணப்படுகிறது. அதிலும் சீரியலுக்கு என்றே இல்லத்தரசிகள் அடிமையாக காணப்படுவார்கள்.

இந்த டிவி சேனல்களுக்கு இடையிலான போட்டியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். இதற்காகத்தான் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.


இந்த நிலையில், தற்போது சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக காணப்படும் 'கயல்' சீரியல் தொடர்பில் ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகிறார்கள்.

அதாவது பெண்ணை மையமாக கொண்டு நகரும் கயல் சீரியல், கடந்த பல மாதங்களாக முன்னிலையில் காணப்பட்டது. ஆனாலும் தற்போது சறுக்கியுள்ளது எனலாம்.

குறித்த சீரியல், தற்போது தமது TRP ரேட்டிங்கை உயர்த்துவதற்காக கண்டபடி கதை நகருவதாகவும், அதனால் இது தான் மட்டமான சீரியல் எனவும் ரசிகர்கள் சீற்றம் அடைந்துள்ளார்கள்.


மேலும், இந்த சீரியலில் வரும் வசனத்தையெல்லாம் காது கொடுத்து ஒரு 5 நிமிசம் கூட கேட்க முடியாத நிலை. அதிலும், கயல் பெரியப்பா - பெரியம்மா, தேவியோட மாமியார் வேதா இவங்க பேசுற பேச்செல்லாம் கேட்டா BP ஏறும் எனவும் கூறியுள்ளர்கள்.

அதுமட்டுமின்றி, Bodyshaming, Name-calling, always negativity flood in screenplay மற்றும் மன ரீதியான பாதிப்பு வருவது எல்லாம் இந்த சீரியலில் சர்வ சாதாரணம். இதனுடன் ஒப்பிட்டால் எதிர் நீச்சல் சீரியல் எவ்வளவோ பரவயில்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.

இதேவேளை, வேறு ஒரு இடமும் இல்லாதது போல அந்த ஒரு ஹாஸ்பிட்டல்லையே வைத்து கதையை நகர்த்துவதும் ரசிகர்களுக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement