• Dec 26 2024

'தங்கல்' படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த இளம் நடிகை திடீர் மரணம்! அதிர்ச்சியில் பாலிவுட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து, நடித்த திரைப்படம் தான் 'தங்கல்'. மல்யுத்த வீராங்கனைகளின் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை நிதீஷ் திவாரி இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் இளம் வயது பவிதாவாக நடித்த பிரபலம் தான்  சுஹானி பட்னாகர்.  

இந்த நிலையில், 'தங்கல்' படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த  சுஹானி பட்னாகர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்திய திரையுலகை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


சில வருடத்திற்கு முன்பு இவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த போது அவர் எடுத்துக் கொண்டு மருந்துகள் இவருக்கு தொடர்ந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, அவரது உடலில் நீர் சேர தொடங்கவே, இவர் உடலில் சேர்ந்த திரவத்தை வெளியேற்றுவதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.


மேலும், இவர் சிகிச்சையில் இருக்கும் போதே இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு சென்றுள்ளது. 

இவ்வாறான நிலையிலேயே  சுஹானி பட்னாகர் இன்று டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பலரும் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement