தென்னிந்திய சினிமாவின் மிக பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் வைக்கம் விஜயலக்ஷ்மி. "குக்கூ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது அழகிய குரலில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மத்தியில் புகழ் பெற்றுள்ளார். "புதிய உலகை", "காக்கா முட்ட", "பிறவி", "என் ஜீவன்", "வாயாடி பெத்த புள்ள" போன்ற பாடல்கள் அனைத்தும் இவரது குரலில் படப்பட்ட பாடல்களாகும்.
அத்துடன் மலையாள சினிமாவில் வெளியான "அங்கு வான கோணிலு" பாடலும் அவரின் முத்து பாடல்களில் ஒன்று. தமிழ் மற்றும் மலையாள சினிமா இரண்டிலும் வைக்கம் விஜயலக்ஷ்மி பல வெற்றிப் பாடல்களை வழங்கி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார். எனினும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட துயரங்களை குறித்து அவர் சமீபத்தில் பேசியுள்ளார்.
குறித்த நேர்காணலில் தனது விவாகரத்து குறித்து ""நான் விவாகரத்து பண்ணதுக்கு காரணம் மியூசிக்ல அது பண்ண கூடாது இது பண்ண கூடாது என்று என் கணவர் என்னை ரொம்ப டிஸ்கரேஜ் பண்ணாரு. என் அப்பா அம்மாவை அவாய்ட் பண்ண சொன்னாரு. நான் மியூசிக்ல கொஞ்சம் ஃபேமஸானது அவருக்கு பிடிக்கல அவருக்கு கொஞ்சம் ஈகோ இருந்ததுன்னு நினைக்கிறேன்.கல்யாணம் ஆகி ஒரு மாதத்திலேயே டிஸ்கரேஜ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. நான் சாமி ரூமுக்கு போனா கூட அவருக்கு பிடிக்காது. தேவையில்லாம கோபப்படுவாரு. அதனால் எனக்கு நிம்மதியே இல்லாம போச்சு. அது எல்லாம் தான் என் விவாகரத்துக்கு காரணம்" என கூறியுள்ளார்.
Listen News!