• Dec 26 2024

கேப்டனின் உடல் பலவீனமாக போனதற்கு இது தான் காரணம்- பயில்வான் ரங்கநாதன் சொன்ன ரகசியத் தகவல்

stella / 11 months ago

Advertisement

Listen News!


கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் உச்சத்தில் இருந்த போது, விஜயகாந்துக்கு என மாபெரும் ரசிகர்கள் படை இருந்தது. நடிப்பை விடவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்வார் கேப்டன்.

முக்கியமாக கால்களால் விஜயகாந்த் போடும் சண்டைக் காட்சிகளுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.


இதையடுத்து, கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.இவருடைய உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இந்நிலையில்,பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் மறைவு குறித்து பேசி உள்ளார்.

அதில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே அந்த காலகட்டத்தில் நிர்வாகம் சரி இல்லாததுதான். எம்ஜிஆர் எந்த காரணத்திற்காக தனி கட்சி தொடங்கினாரோ, அதை பாணியில் அதே காரணத்திற்காக விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கூட்டணிவைக்காமலே எதிர்கட்சித் தலைவர் ஆனார். 


சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார் விஜயகாந்த்.எம்ஜிஆர் எப்படி அனைவருக்கும் வயிறு நிறைய சாப்பாடு போட்டாரோ அதேபோல அனைவருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர் . அவர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் மீன், நண்டு,கோழி என வகை வகையான உணவுகள் இருக்கும்.

 குறிப்பாக ஸ்டண்ட் கலைஞர்கள் மீது அதீத அன்பு கொண்டவர். எந்த சண்டை காட்சிக்கும் இவர் டூப் போட்டதே இல்லை. அப்படி திடகாத்திரமான உடலை கொண்ட விஜயகாந்தை இப்படி பார்க்கும் போது மனம் வலிக்கிறது. அவருடைய பலவீனமே மதுபோதைதான், அந்த பலவீனம் மட்டும் அவரிடம் இல்லாமல் இருந்து இருந்தால், கேப்டன் இன்று நம்மோடு இருந்து இருப்பார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement