தமிழ் சினிமாவில் தற்போது முன்னனியில் இருக்கும் நடிகை திரிஷா இவர் சமீபகாலங்களாக பிரபல நடிகர்களான அஜித் ,விஜய் ,சூர்யா ,விக்ரம் இவர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். சாதாரண ஒரு நடிகையாக அறிமுகமாகி இன்று இவ்வளவு பெரிய நடிகையாக உயர்ந்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பொது ரசிகர்கள் மாத்திரமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் இவரது தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் ராதாரவி நடிகை திரிஷா குறித்து ஒரு சில விடயங்களை பேசியுள்ளார்.குறித்த நேர்காணலில் திரிஷா குறித்து " த்ரிஷாவோட வாழ்க்கை ஒரே நைட்ல மாறியது தான். 'லேசா லேசா' படத்தில் நடிக்க மும்பையில இருந்து ஒரு பொண்ணு வர வேண்டியது. முன்னாடியே அந்த பொண்ணு வந்து இருந்தா அவங்க தான் ஹீரோயின். அந்த பொண்ணு வராததனால அங்க இருந்த 6, 7 பொண்ணுங்கள த்ரிஷா நல்லா இருக்காங்கன்னு அவங்கள ஹீரோயினாக போட்டுட்டாங்க. ஏன்னா அந்த மும்பை பொண்ணு வரல. சினிமா அப்படிதான். டக்கு டக்குனு எல்லாமே மாறும். எழுதப்படுகிற விதியிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது" என கூறியுள்ளார்.
Listen News!