விக்ரம் பிரபு நடித்த வாகா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த நடிகை ரன்யா துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கக்கட்டிகளை கடத்தியமையினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சோதனையிலிருந்து தப்பிக்க தொடையில் தங்கக்கட்டிகளை ஒட்டிவைத்திருந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரன்யாவிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து பெங்களூருவிற்கு தங்கக்கட்டிகளை கடத்தி வந்த நடிகை சோதனைத் தண்டனைகளிலிருந்து தப்பிக்க தனது பெயரை "குருவி" என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு ஏடிஜிபி மகள் என்று கூறி இதுவரை சோதனைகளிலிருந்து தப்பித்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது இந்த கடத்தல் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினரின் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Listen News!