• Dec 25 2024

1000 கோடிக்காக தான் இந்த திருமணம் நடந்துச்சு.. நாக சைத்னயா பற்றி பிரபலம் உடைத்த உண்மை

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து நடித்தார்கள். இதன் போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர வீட்டு தரப்பில் இருந்தும் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டது. அதன் பின்பு 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சில வருடங்களை ஒன்றாக வாழ்ந்த இருவரும் 2021 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக பிரிய உள்ளதாக தெரிவித்தார்கள்.

இவர்களுடைய பிரிவுக்கு காரணம் சமந்தாவுக்கு ஏற்பட்ட மையோசிடிஸ் நோய்தான் எனக் கூறப்பட்டது . அதன் பின்பு நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்தார். இந்த காதலுக்கும் அவர்களுடைய வீட்டார்கள் பச்சை கொடி காட்டினார்கள்.


இதை அடுத்து கடந்த நான்காம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரண்டு வீட்டாரும் நண்பர்களை தவிர்த்து திரை உலகில் இருந்த பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள்.


இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இவர்களுடைய திருமணம் தொடர்பில் கூறுகையில், சமந்தாவின் அப்பா இறந்த போது தான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வந்தது என்று தெரியவில்லை.சைதன்யா சமந்தாவை ரொம்ப மிஸ் பண்ணி விட்டார். அதற்காக அவர் தான் வருத்தப்பட வேண்டும்.

நோய் காரணமாகத்தான் சமந்தாவை அவர் பிரிந்ததாக சொல்லப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நெருக்கம் ஏற்கனவே ஏற்பட்டது. அதனால்தான் அவரை சமந்தா ஒதுக்கி விட்டார் என்ற தகவலும் உள்ளது.

நாகார்ஜுனா குடும்பத்திற்கு 3000 கோடி வரை சொத்து உள்ளது. சோபிதாவுக்கும் 1000 கோடி சொத்து இருக்கு.  ஆயிரம் கோடியுடன் ஒரு பெண் வந்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள். அந்த ஆயிரம் கோடிக்காக தான் நாக சைதன்யா இந்த திருமணத்தை செய்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement