• Dec 25 2024

மனோஜுக்கு கிடைத்த புரொஃபிட்ஸை வைத்து முத்துவை கேவலமா அசிங்கப்படுத்திய ரோகிணி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை பொண்ணு கேட்டு முத்துவின் நண்பர் வீட்டுக்கு வருகின்றார். அவர் மீனாவின் அப்பா என நினைத்து அண்ணாமலையிடம் அவரை பொண்ணு கேட்கின்றார். அந்த நேரத்தில் முத்துவும் அங்கு வந்து விடுகின்றார்.

குறித்த இளைஞனை பார்த்த மீனா, நீ இங்கேயும் வந்துட்டியா? என்று கேட்க, முத்து என்ன நடந்தது என்று கேட்கின்றார். அதற்கு முத்துவிடம் என்னை ஒருத்தன் போலோ பண்ணுகிறான் என்று சொன்னனே.. அது இவன்தான் என்று சொல்ல, இறுதியில் முத்து  கொடுத்த ஐடியாவில் தான் அவர் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தார் என்ற விஷயம் தெரிய வருகின்றது.

அதன் பின்பு மீனா தனது மனைவி என்று சொல்ல, முத்துவின் கால்களை பிடித்து  தனக்கு தெரியாது.. தான் மீனாவின் கண்களை மட்டும் தான் பார்த்தேன்.. அவர் திருமணம் ஆனது தெரியாது என்று கெஞ்சி புலம்புகிறார்.


இதைத் தொடர்ந்து மீனாவின் போட்டோவை பார்த்து தான் அவரை போலோ செய்ததாக சொல்ல, ஸ்ருதி தான் எடுத்த போட்டோவால் தான் அவர் வந்திருக்கின்றார் என்றும், அதற்கு கீழே நிறைய கமெண்ட்ஸ் இருக்குது என்று இருவரும் படித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த விஜயா நீங்க ரெண்டு பேரும் எப்போ ஒன்னு சேந்திங்க என்று ஸ்ருதிக்கு திட்டுகின்றார். அதற்கு ஸ்ருதி நீங்க பார்வதி ஆன்ட்டி வீட்டில் இருக்கும்போதே நாங்க சேர்ந்துட்டோம் என்று பதிலடி கொடுக்கின்றார்.

இதை அடுத்து ரோகிணியும் மனோஜூம் வீட்டிற்கு வந்து எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கின்றார்கள். என்ன விசேஷம் என்று கேட்க, மனோஜ்க்கு பத்து லட்சம் ரூபாய் புரொஃபிட்ஸ் கிடைத்ததாக சொல்லுகின்றார். அந்த நேரத்தில் வழக்கம் போல முத்து கிண்டல் பண்ண, ஹார்ட் வொர்க் மட்டும் போதாது ஸ்மார்ட் வேர்கம் வேணும் மனோஜ் இதைவிட இன்னும் உயர்ந்த இடத்தை பிடிப்பார் என்று முத்துவை அசிங்கப்படுத்தும் விதத்தில் ரோகினி பேசுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement