• Dec 25 2024

இந்த வார டபுள் எலிமினேஷன்! வெளியேற போகும் அந்த போட்டியாளர்! யார் தெரியுமா?

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் 8ன் இந்த வாரத்துக்கான டபுள் எலிமினேஷன் தொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதில் முக்கிய போட்டியாளர்களான இருவர் நோமினேட் ஆகி இருக்கிறார்கள். அது குறித்து பார்ப்போம்.


பிக் பாஸ் சீசன் 8 தற்போது 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு சிலர் எலிமினேட்டாகிய  நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ரயான், ராணவ், ரஞ்சித், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா ஆகியோர் இருக்கிறார்கள். 


ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி இடம்பெறுகிறது. இந்நிலையில் எலிமினேஷன் டபுள் டபுளாக நடந்து வருகிறது. இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. 


ஓட்டிங் நிலவரப்படி, ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். இந்த 3 பேரில் ரஞ்சித் தான் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் ராயன் அடுத்ததாக குறைந்த வாக்குளை பெற்றுள்ளார். ஆகவே இவர்களை இருவரும் வெளியே போக  வாய்ப்பு இருக்கிறது. மேலும் சிலநேரம் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் டுவிஸ்ட் நடைபெறவும் வாய்ப்பு இருக்கிறது. யார்யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

Advertisement

Advertisement