• Dec 27 2024

இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்! மாற்றமடைந்த ஓட்டிங் லிஸ்ட்! கடைசிக்கு தள்ளப்பட்ட ஜோவிகா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது. தற்போதுள்ள போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களைத் கவர முயற்சித்து வருகின்றனர். 

ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில்,  இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வௌயேறுவார் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, விசித்ராவுக்கு ஆதரவாக 23.6% வாக்குகளும், தினேஷ் 22.6% வாக்குகளும் பெற்று முன்னணியில் இருப்பதோடு, கடைசி மூன்று இடங்களில் கூல் சுரேஷ், விக்ரம், ஜோவிகா ஆகியோர் காணப்படுகின்றனர்.

அதேவேளை, இம்முறை பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களில் மணிச்சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், சரவணா விக்ரம், பூர்ணிமா ரவி, விசித்ரா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் ஆகியோர் அடங்குவர். 


அத்துடன், கடந்த வாரங்களில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அனன்யாவின் பெயரும் இதில் அடங்கும். இவ்வாறு அவர் வந்த உடனேயே எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டதை பார்த்த  அனன்யாவுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இதேவேளை, இறுதி நிலையில் காணப்படும் ஜோவிகாவின் நீக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறுபட்ட கணிப்புகளை கிளப்பியுள்ளது. அதேபோல் எதிர்வரும் நாட்களில் வாக்குப்பதிவு போக்கு எப்படி மாறுகிறது என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement