• Dec 26 2024

அதுவரைக்கும் நான் தனுஷை பார்க்கவே இல்லை, ஆனால் சம்பளத்தை தந்து விட்டார்- அமீர் கூறிய முக்கிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அமீர். இப்படத்தின வெற்றியைத் தொடர்ந்து  ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.இதில் இவர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வருகின்றார்.மேலும் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திலும் அமீர் லீடிங் ரோலில் நடித்திருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் அமீரின் ராஜன் கேரக்டர் தான் செம்ம வெயிட்டாக இருந்தது. 


சமீபத்தில் அமீர் கொடுத்த பேட்டியொன்றில் வடசென்னை படம் பற்றி பேசியிருந்தார். அதில், வடசென்னை படத்தில் நடிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றாலும் வெற்றிமாறனுக்காக கமிட்டானேன்.அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை தனுஷ் சொந்தமாக தயாரித்துள்ளார். 

அதற்காக அமீரின் சம்பளம் குறித்து பேச தனுஷ் தரப்பில் இருந்து இயக்குநர் சுப்ரமணிய சிவா தான் சென்றுள்ளார். அமீர் கேட்ட சம்பளத்தை எந்தவிதத்திலும் குறைக்காமல் அப்படியே கொடுத்துவிட்டாராம் தனுஷ். அதேபோல், வடசென்னை ஷூட்டிங் முடியும் வரை தனுஷை பார்க்கவே இல்லை என அமீர் கூறியுள்ளார்.

படத்தில் எங்குமே அமீர் - தனுஷ் இணைந்து நடிக்கும் வகையில் காட்சிகள் கிடையாது. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட தனுஷை சந்திக்கவில்லை. கடைசியாக வடசென்னை ரிலீஸுக்கு முன் நடைபெற்ற ப்ரஸ் மீட்டில் தான் தனுஷை சந்தித்தேன். படம் ரிலீஸாக ஒருநாள் முன்பு தனுஷ் போன் செய்தார், 


அப்போது நாளைக்கு உங்க படம் ரிலீஸாகுதுன்னு சொல்லி வாழ்த்தினார். அதனை மறுத்துவிட்ட நான், "தனுஷ் இது உங்க படம்" என சொல்லிவிட்டேன். அதன்பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம், அதனால் தான் தனுஷ் சொன்னதற்காக அவருடன் மாறன் படத்தில் நடித்தேன் என அமீர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement