• Dec 27 2024

என்னது பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜோவிகா எவிக்ட்டா.? உறுதி செய்தது வனிதாவின் இன்ஸ்டா பதிவு! எகிறும் லைக்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.

இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.


இவ்வாறு 60 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தள பக்கமொன்றில் திடீர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் 'என்னது ஜோவிகா அவுட்டா' என கமெண்ட் செய்து வருகின்றனர். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், 


'நீங்க தோல்வியுற்றால் நம்பிக்கையை ஒருபோதும் கை விடாதீர்கள்.. ஏனென்றால், FAIL என்பதற்கு அர்த்தம் அது கற்றலில் முதல் முயற்சி என்பதாகும்.மேலும் முடிவு என்பது முதலல்ல. அத்துடன் உங்களுக்கு NO என்று பதில் கிடைத்தால் அது அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பு என எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் மனநிலையை மாற்றுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பிக் பாஸ் ஓர்டிங் லிஸ்டில் இறுதியாக காணப்பட்ட ஜோவிகா எவிட் ஆகியுள்ளார் என்பதை யூகிக்க முடிகிறது.

 


 

Advertisement

Advertisement