ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜெய் ஆகாஷ் - ரேஷ்மா முரளிதரன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களே ஆன நிலையில் திடீரென முடிவுக்கு வந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் திடீரென எதற்காக முடிவுக்கு வந்தது என்பது தொடர்பில் இந்த சீரியலின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வருகின்றது.
d_i_a
அதன்படி அவர் கூறுகையில், நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பலவிதமான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை. இதற்கு உண்மையான காரணமே என்னுடைய உடல்நிலை தான்.
இந்த சீரியல் ஆரம்பிக்கப்படும் முன்பே எனக்கு நடைபெற்ற விபத்தில் காலில் பலத்த அடிபட்டது. அதற்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் குறிப்பிட்ட நாட்களிலேயே இந்த சீரியலை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக ஆபரேஷன் செய்யாமல் அந்த வலியோடு தான் சீரியலில் நடித்தேன்.
அதிலும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக நாள் முழுக்க சூட்டிங் நடந்தது. அதில் ரேஷ்மாவை தூக்கிக்கொண்டு நான் ஓடுவது போன்ற காட்சியும் இருந்தது. அதை எடுத்து முடித்ததும் என் கால் வலி அதிகமாகி விட்டது. ஆனாலும் அதை அட்ஜஸ்ட் பண்ணினேன்.
இதை தொடர்ந்து லண்டனில் என்னுடைய மனைவி எனது உடல் நிலையை பார்த்து கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஆப்ரேஷன் செய்தால் இரண்டு மாதம் என்றாலும் ரெஸ்ட் எடுக்க வேண்டும். இப்போதைக்கு ஆபரேஷன் செய்யவில்லை என்றால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பதற்காக ஆபரேஷன் செய்தேன்.
இதனால் கதாநாயகன் இல்லாமல் சீரியலில் சுவாரஸ்யம் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. சேனல் தரப்பும் வேறு ஹீரோவை போட விரும்பவில்லை. இதனால் தான் சீரியலை முடிக்கின்றோம். இதற்கு காரணம் என்னுடைய உடல்நிலை மட்டும் தான். என்னுடைய பட சூட்டிங் அத்தனையும் ஒதுக்கி வைத்து விட்டு இந்த சீரியலுக்கே முக்கியத்துவம் கொடுத்தேன் என்று ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Listen News!