• Jan 18 2025

கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடிய ரோபோ ஷங்கர்.. ஹைலைட் போட்டோவே இதுதான்..

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு ஆடியவர் தான் சங்கர். அதன் பின்பு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர், வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகர் ஆக அறிமுகமானார்.. இந்த படத்தில் இவருடைய காமெடி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது.

இதைத்தொடர்ந்து அம்பி என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்துள்ளார் ரோபோ சங்கர். இந்த படத்தை டி2 மீடியா நிறுவனம் சார்பில் பிரசாந்த் பிரான்சிஸ் தயாரிக்கின்றார். அதில் ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகரன் நடித்துள்ளார். இந்த படம் காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

d_i_a

இன்னொரு பக்கம் தனது குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ரோபோ சங்கர், தாத்தாவான சந்தோஷத்தை சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடி இருந்தார். இவருடைய மகள் இந்திரஜிதா விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பின்பு தொடர்ச்சியாக படங்களில்  நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் திருமணத்தில் இணைந்து குடும்பப் பெண்ணாக மாறிவிட்டார்.


இந்த நிலையில், ரோபோ  சங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் தெறிக்கவிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு ரோபோ ஷங்கருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் குறித்த புகைப்படத்தில் இந்திரஜிதா கர்ப்பமாக காணப்படும் நிலையில் ரோபோ சங்கரும் தனது  தொப்பையை வைத்து தனது மகளுடன் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படமும் பலரின் கவனம் ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement