• Dec 26 2024

மன்சூர் விஷயத்தில் எகிறிய திரிஷா... சுசி விஷயத்தில் அடக்கி வாசித்து பதிலடி ட்விட்?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாடகியாக காணப்படும் சுசித்ரா பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது சுற்றில் சென்ற விவகாரம் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பக்கத்தில் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா போன்ற பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி தமிழ்த் திரை உலகுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

இந்த விவகாரத்துக்கு பிறகு சுசித்ராவின் திரை உலகுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பின் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக அவரது கணவர் கார்த்திக் குமார் கூறி அவரை விவாகரத்தும் பண்ணியிருந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சுசி, சில ஆண்டுகள் மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.

தற்போது தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுசித்ரா, பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தும் பயில்வாணன் குறித்தும் த்ரிஷா பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் வெளியான போட்டோக்கள் அனைத்தையும் த்ரிஷா தான் கொடுத்தார் என்று கூறியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் அவங்க ஐ அம் ஹார்ட் அண்டு ஆளாளுக்கு ஒரு போஸ்ட்  போட்டுட்டு அவங்க பாதிக்கப்படாமல் உட்கார்ந்து இருந்தாங்க என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது சுசித்ராவின் பேட்டி வைரலான நிலையில் நடிகை திரிஷா அதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் நான் சரியாக இருந்தாலும் உலகம் என்னை குறை கூறுகிறது. உண்மைக்கு புறம்பாக பேசுகிறது என்று குழப்பமாக இருக்கும் எமோஜியையும் ஷேர் செய்து இருக்கிறார் நடிகை திரிஷா.


இதேவேளை, சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுக்கும் மன்சூர் அலிகானுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் திரிஷா அதிரடி காட்டினார். ஆனால் சுசித்ரா விஷயத்தில் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement