• Dec 26 2024

இந்த நான்கு லவ் ஜோடியும் பிரிய காரணம் தனுஷா? அடுத்தடுத்து நடந்த விவாகரத்துகளின் லிஸ்ட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள் இடம் பெற்று வருகிறது, அதில் முக்கியமாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து மற்றும் தற்போது ஜிவி பிரகாஷ், சாய்ந்தவி விவாகரத்து இவற்றையெல்லாம் கடந்து பாடையை சுசித்ரா மீண்டும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷுடன் பணியாற்றிய பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து கோரி உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவை அனைத்திற்கும் தனுஷ் தான் காரணமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதன்படி, 2015ம் ஆண்டு தனுஷ் நடித்த மாரி படத்தில் பணியாற்றிய பாடகர் மற்றும் நடிகராக காணப்படும் விஜய் ஜேசுதாஸ் அடுத்த வருடமே தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளார்.


2016ம் ஆண்டு அம்மா கணக்கு என்று படத்தில் நடிகை அமலாபால் நடித்துள்ளதோடு, அந்த படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த படம் வெளியான அதே ஆண்டு அவரை விவாகரத்து செய்து உள்ளார்.

2017 ம் ஆண்டு வெளியான பா. பாண்டி படத்தில் தனுஷ் நடிகராகவும் இயக்குனராகவும் காணப்பட்டார். அந்த படத்தில் விஜய் டிவி புகழ் திவ்யதர்சினி நடித்திருந்தார். அவரும் அந்த படம் வெளியான அதே ஆண்டு விவாகரத்து கோரியுள்ளார்.

இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து இருந்ததோடு, அதற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். அவரும் கடந்த இரண்டு நாட்கள் முன் தன் காதல் மனைவியை பிரிவதாக தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு அடுத்தடுத்து நடிகர் தனுசுடன் பணியாற்றிய பிரபலங்கள் விவாகரத்து கோரி வருகின்றமை திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement