• Dec 27 2024

TTF வாசனை தூக்கி வைத்து ஷாலினி ஜோயா செய்த காரியம்! கண்டபடி கமெண்ட் பண்ணும் பேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையான ஷாலினி ஜோயா, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அத்துடன் அவ்வப்போது சில குறும்படங்களிலும் நடித்து வருகின்றார்.

1997 ஆம் ஆண்டு கேரளா மல்லபுரத்தில் பிறந்தவர் இவர், குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். தற்போது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ராஜா மந்திரி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு கண்ணகி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

இதைத்தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். அதில் இவரது ஆக்சன் மற்றும் கொஞ்சம் கொஞ்சம் பேசும் தமிழும் பலராலும் ரசிக்கப்படுகிறது.


இவர் யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசனை காதலித்து வருகின்றார். இவர்களின் புகைப்படங்கள் படு வைரலானது. இதைத்தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசலுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலினி ஜோயா. 

அதில் டிடிஎஃப் வாசனுக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், ஒரு புகைப்படத்தில் டிடிஎஃப் வாசனை தனது மடியில் வைத்து கொண்டிருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement