• Dec 25 2024

விஜயின் ஹேர் ஸ்டைலுக்கு பின்னால் இப்படியொரு சீக்ரெட்டா? உடைத்த ஹேர் ஸ்டைலிஸ்ட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர் தான் விஜய். இவர் அரசியலிலும் உள் நுழைந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றார்.

சினிமா துறையில் இருக்கும் போதே இன்னொரு பக்கம் அரசியல் துறையிலும் சில ஈடுபாடுகளிலும் மும்மூரம் காட்டி வந்தார் விஜய். அதன்படி கடந்த ஆண்டு தொடக்கம் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே சென்று நிவாரணம் கொடுத்தது, பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சான்றிதழ் பரிசு மற்றும் வைர மோதிரம், நெக்லஸ் கொடுத்தது, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது என சமூகம் சார்ந்த நல பணிகளை ஈடுபட்டு வருகின்றார்.

இதை தொடர்ந்து நேற்றைய தினம் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது விழா சென்னையில் நடத்தப்பட்டது.


இதில் கலந்துகொண்ட விஜய் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தனது கையால் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். அதில் அவரது லுக் பலராலும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விஜயின் ஹேர் ஸ்டைல் பற்றிய சீக்ரெட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

அதாவது விஜயின் ஹேர்  ஸ்டைலிஸ்ட் ஆன தேவ்  கூறுகையில் , ஒரு முறை விஜய் சார் எனக்கு கால் பண்ணி ஹாய் தேவ்.. எனக்கு  ஷூட்டிங் முடிஞ்சது. இப்போ எந்த ஹேர் ஸ்டைல் வேணும்னாலும் வைக்கலாம் என்று சொன்னார். அதுக்கு நான் ஹார்ட் ஹேர் ஸ்டைல் போடலாமா? என்று கேட்க, லியோ ஸ்டைலா என்று கேட்டார் விஜய். நானும் அதே ஸ்டைல் பண்ணி முடிச்சதும் அவருக்கே உரித்தான ஒரு சின்ன சிரிப்பை சிரித்தார் என்று கூறியுள்ளார் தேவ்.

Advertisement

Advertisement