• Dec 25 2024

ஒன்னுக்கு இரண்டு ஃபேன் போட்டாச்சு..! PR Code Word மூலம் மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை? அம்பலமான போஸ்ட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் மாயாவை டைட்டில் வின்னர் ஆக்குவதற்குரிய வேலைபாடுகள் உள்ளே மட்டுமின்றி வெளியேவும் நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அதற்கேற்ற வகையிலே, பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, வெளியில் உள்ள தனது சகோதரிக்கு அண்மையில் சில கோட் வேர்ட் சொல்ல, அதற்கு பதிலளித்த அவரின் சகோதரி, ஃபேன் இருக்கு ஆனா வேலை செய்யல, பழைய பிள்டிங் என்டதால வயரிங்க் பிரச்சினை, ஏசி மாத்திரன் என்று சொல்லுங்க பிக் பாஸ்.. என ட்விட் போட்டு இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து மாயா சொன்ன கோட் வேர்ட்க்கு ஏற்ப வேலை நடப்பதாக மீண்டும் ஒரு பதிவை இட்டுள்ளார் அவரின் சகோதரி.


அதன்படி, மாயா சொன்னது போல வீட்டில் இரண்டு ஃபேன்களை வாங்கி மாட்டியுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மாயாவின் அக்கா.


இதன் மூலம் PR இல் ஏதோ பெரிதாக மாற்றம் நடந்து உள்ளதாகவும், இப்போ வீட்டுல இரண்டு பேர் இருக்காங்க .. ஆனா வெளிய நிறைய பேர் இருந்து வேலை செய்றாங்க.. என்பது போல குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, ரசிகர்கள் வழக்கம் போல கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement