• Dec 26 2024

"ரொம்ப Bold ஆன பொண்ணு... அந்த மாதிரி கேரக்டர் இல்ல... Poornima 1st Interview After Bigg Boss...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பூர்ணிமா ரவி திரைக்கு வரவிருக்கும் செவப்பி திரைப்படத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது திரைப்படத்தில் தான் நடித்திருந்த அனுபவம் குறித்து பேசியிருந்தார். 


செவப்பி திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக கூறுங்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பூர்ணிமா  இவ்வாறு கூறியிருந்தார். நான் எப்போதும் அராத்தில செய்றமாதிரி கத்தி காமெடியா பேசுற கேரக்டர் இல்ல இந்த படத்துல ரொம்ப போல்டான கேரக்ட்டர். முதல்ல செய்றதுனால அப்படி தான் வேணும் இப்படித்தான் வேணும் என்று கேட்க இல்ல அந்த படத்துல பூமி கேரக்டர் தான் செய்தேன்.


இதில் ஒரு அம்மா தனது மகனுக்கு ஒன்றும் ஆகா கூடாது என்று என்ன செய்வார்களோ அதைத்தான் இந்த படத்துல செய்திருக்கேன். அந்த சின்ன பையனோட ஆப் ஸ்கிரீன்ல கதைத்து ஓகே ஆன பிறகுத்தான் ஒன் ஸ்கிரீன்ல நடிச்சேன். ரொம்ப கஷ்ட்ட படவில்லை சிறப்பாக செய்து இருக்கிறோம் என்று கூறினார்.  

Advertisement

Advertisement