• Jun 20 2026

உன்னி முகுந்தனின் அடுத்த ஆக்சன் படம் ரெடி.. வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான கருடன் படத்தை தொடர்ந்து உன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'மார்கோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹனிஃப் அடேனி இயக்குகின்றார்.

மலையாள சினிமாவில் இளம் ஹீரோவாக திகழ்ந்த உன்னி முகுந்தன்,  தற்போது தமிழ் படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.  இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இவ்வாறு உன்னி முகுந்தன் - ஹனிஃப் அடேனி கூட்டணியில் உருவாகும் 'மார்கோ'. க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர்.


இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் மார்கோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளன.

குறித்த  போஸ்டரில் உன்னி முகுந்தன் ரத்தம் தோய்ந்த முகத்துடன், வாயில் கத்தியையும் வைத்து காணப்படுகிறார். இதுவே படம் மீது இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.


Advertisement

Advertisement