• Dec 26 2024

நடிகர் சூரி நடிக்கும் கருடன் படத்தின் அப்டேட்.. நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு..!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் ஆக காணப்பட்ட நடிகர் சூரி விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக திகழ்ந்து  வருகின்றார். தற்போது அவரது நடிப்பில் உருவாகும் கருடன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் ஆகவும் சமுத்திரகனி, சசிகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டரிடம் நடித்து வருகின்றார்கள்.

இந்த படத்தின் கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத, இதனை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம்  வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகும் கருடன் படத்தின் ரிலீஸ் திகதி பற்றி நாளைய தினம் மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement