• Dec 27 2024

உத்தரப் பிரதேச உயிரிழப்புகள், வைரமுத்து வெளியிட்ட கவிதை !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உ.பி.யில் மத நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட  50 பேர் உயிரிழப்பு... » AthibAn Tv | Tamil News | Today News

இத் துன்பியல் நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் அஞ்சலி மற்றும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்தான இரங்கல் கவிதையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான வைரமுத்து "படிப்போமா ?" எனும் கேள்வியுடன் கவிதையை நிறைவு செய்திருக்கிறார்.


"மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான்" என்று கவிதையில் குறிப்பிடும் கவிஞர் அளவுக்கு மீறிய பக்தியும் போதை என்றே குறிப்பிட்டு அறிவுக்கண் திறக்க வேண்டும் என தன் கவிதையில் சொல்லியிருக்கிறார்.



Advertisement

Advertisement