தமிழ் திரையுலகில் புதுமையான கதைகள் என்றுமே ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காணப்படும். அதிலும், ஒரு நடிகர் தனது படத்தை "இதுபோன்ற படம் இந்தியன் சினிமாவிலேயே வந்தது இல்லை" என்று கூறினால், அது ரசிகர்களுக்குள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் வைபவ் ரெட்டி, தனது புதிய படம் ‘பெருசு’ பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவில் யாரும் இதுபோன்ற ஒரு கதையை செய்ததில்லை என்றதுடன் இது ஒரு மிகப்பெரிய புதுமையான படம் எனவும் தெரிவித்தார்.மேலும் உண்மையிலேயே இந்திய சினிமாவில் இதுபோன்ற கதைக்களம் வந்ததே இல்லை!" என்றார்.
நடிகர் வைபவ் கருத்துகளின்படி, ‘பெருசு’ ஒரு சினிமா அனுபவத்தை மாற்றக்கூடிய படமாக இருக்கிறது என்றார். மேலும் "இந்த படத்தை அனைத்து ரசிகர்களுக்காகவும் மிக விரைவில் திரையரங்கில் வெளியிடவுள்ளோம்!" எனவும் கூறினார்.
நடிகர் வைபவ் கூறியதன் மூலம், ‘பெருசு’ தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் படமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர். தமிழ் சினிமாவில் புதிய கதைக்களங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்து ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!