• Mar 04 2025

மாஸ் ஹீரோ இல்லாவிட்டாலும் படம் ஹிட் ஆகும்...! – ஷாம் அதிரடிப் பேச்சு!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா எப்போதும் மாறிக்கொண்டே வருகின்ற ஒரு துறை. அந்தத் துறையில் ஒரு காலத்தில் மாஸ் ஹீரோக்களின் ஆக்சன் ,  பஞ்ச் டயலாக் மற்றும் ரசிகர் கூட்டம் ஆகியவை ஒரு திரைப்பட வெற்றிக்கு முக்கியமாக கருதப்பட்டன. ஆனால், தற்போது நல்ல கதைக்களம், சிறப்பான திரைக்கதை மற்றும் திறமையான நடிப்பு ஆகியவையே வெற்றியை தீர்மானிக்கின்றன.

இந்த மாற்றத்தை நடிகர் ஷாம் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "ஒரு காலத்தில் மாஸ் ஹீரோக்கள் தான் முக்கியம். அவர்களின் ஸ்டைல், பஞ்ச், பிரம்மாண்டமான சீன் போன்றவை ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றன. ஆனால், இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்று ஒரு படம் வெற்றி பெறுவதற்கு அது எவ்வளவு தரமான கதையை கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். மாஸ் ஹீரோக்கள் இல்லாவிட்டாலும், நல்ல கதை இருந்தால் படம் ஹிட்டாகும்!" என்றார்.


ஏற்கனவே தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் மாஸ் ஹீரோக்களாக உருவாகி திரையரங்குகளை கவர்ந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் கே.ஜி.எப், விக்ரம், ஜெய் பீம், 96, மண்டேலா மற்றும் டிராகன் போன்ற படங்கள் நல்ல கதை அம்சத்தைக் கொண்டு வெற்றி பெற்றுள்ளன.

மேலும் ஷாம் கூறியதாவது, "ஒரு காலத்தில், தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் இல்லாமல் ஒரு படம் ஹிட் ஆகவே முடியாது என்று நினைத்தார்கள். ஆனால், இப்போது சிறிய படங்களே அதிகமான வரவேற்பைப் பெறுகின்றன. மக்கள் ஒரு கதையை ரசிக்கத் தொடங்கிவிட்டனர் என்றதுடன் உண்மையில் இது ஒரு நல்ல முன்னேற்றம்" என்றார்.


நடிகர் ஷாமின் இந்த கருத்து தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை சரியாக பிரதிபலிக்கிறது. தற்பொழுது பெரிய ஹீரோக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல கதைகள் கொண்ட படங்கள் வெற்றியடையும் என்பதுதான் இன்றைய சினிமாவின் உண்மை. இதனால், எதிர்காலத்தில் "மாஸ் ஹீரோ" என்பதை விட "மாஸ் கதைகள்" தான் முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

Advertisement

Advertisement