• Dec 27 2024

ராதிகாவுக்கு வாழ்க்கை கொடுத்த வள்ளல் கோபி செய்த காரியம்! பிளவுபட்ட வீடு! பரிதாப நிலையில் ஈஸ்வரி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரியை  நினைத்து பாக்கியா வீட்டார்கள் எல்லோரும் அழுது கொண்டிருக்க, பாக்கியாவும் கிச்சனில் போயிருந்து அழுது கொண்டிருக்கின்றார்.

அதன் பின்பு ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி கதவு மூடி இருக்கவும் கதவை கோபத்தில் உடைத்து உள்ளே சென்று , கமலாவின்  கழுத்தை நெரித்துக் கொல்ல பார்க்கின்றார். ராதிகா தடுக்கவும் வீட்டில் இருந்த சாமான்கள் எல்லாவற்றையும் கீழே போட்டு உடைத்து சண்டை போடுகின்றார்.

இதன் போது ராதிகா உங்க அம்மா செய்த தப்புக்கு தான் ஜெயில்ல இருக்காங்க என்று சொல்ல, தப்பு பண்ணியது அம்மா இல்ல நான் தான். உன்னை கட்டினது தான் பெரிய தப்பு. உன் மேல பரிதாபப்பட்டது தப்பு என பேச, ராதிகாவும் நான் மட்டும் சந்தோஷமாகவா இருக்கேன். உங்களால என நிம்மதியே போயிட்டு என்று சொல்ல, நான் இல்லாட்டி நீ நடு தெருவுல இருந்து  இருந்திருப்பா, உன்ட சோக கதையை கேட்டு உனக்கு பரிதாபப்பட்ட எனக்கு இப்ப இந்த நிலைமை எனக் கோபியும் ராதிகாவுக்கு சரமாரியாக பேச்சு கொடுக்கிறார்.


அதன் பிறகு அம்மாவுக்கு ஏதாவது சரி ஆகிட்டு என்றால் உங்க ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன் கொலை பண்ணி போட்டு நானும் ஜெயிலுக்கு போவேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

அதன் பின்பு ஈஸ்வரி ஜெயிலில் இருந்து கோபியை நினைத்து இதுவரை நடந்த பிரச்சனைகளை நினைத்து அழுது கொண்டிருக்கின்றார். அதன் பின்பு போலீசார் அவரிடம் விசாரணையை மேற்கொள்ள, தான் ராதிகாவை தள்ளி விட இல்லை என ஈஸ்வரி சொல்லுகின்றார். ஆனாலும் போலீசார் துருவித் துருவி விசாரிக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement