• Dec 26 2024

பாட்டியின் பரம்பரை நகை யாருக்கு சொந்தமானது? முத்து கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் விஜயா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாட்டி பேசிய வீடியோவை பார்த்து எல்லோரும் ரொம்ப அழகாவும் சரியாகவும் பேசினீங்க என பாராட்டுகிறார்கள். அண்ணாமலையும் ரொம்ப நல்ல விஷயம் பண்ணி இருக்கா என்று மீனாவை பாராட்ட, மனோஜ், விஜயா ஆகியோர் கடுப்பாகுகிறார்கள்

அதன்பின்பு பாட்டியின் தோழிகள் கேக் நல்லா இருக்கு என்று சொன்னதும் அது என் பேரன் ரவி எனக்காக பண்ணினது. கேக் பெயர் கூட என்னது தான் என்று சொல்லி பாட்டி சந்தோஷப்பட, மனோஜ் பொறுமையை இழந்து ஸ்பெஷல் கிஃப்ட் யாருக்கு என கேட்கிறார்.

பாட்டி விஜயாவை கூப்பிட்டு தன்னுடைய பையை எடுத்து வருமாறு சொல்லுகிறார். அதிலிருந்து பரம்பரை நகை ஒன்றை வெளியில் எடுத்து நாலு தலைமுறையா இந்த நகை நம்ம கிட்ட இருக்கு. இது வெறும் நகை இல்ல குடும்பத்தோட கவுரவம் என்று சொல்லுகிறார்.

மேலும் இதை சரியானவங்க கிட்ட ஒப்படைக்கனும்னு தான் இருந்தேன் என்று சொல்லி, விஜயா டிவி வாங்கி கொடுத்தது ரொம்ப சந்தோசம். ஊர்ல எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லுவேன். அவளுக்கு கண்டிப்பா ஏதாவது செய்வன் என்று சொல்லி பல்பு கொடுக்கின்றார்.

அதன் பின் மனோஜின் நவராத்தின மாலை பேச அப்போ அந்த ஸ்பெஷல் கிப்ட் எனக்குத்தான் என்று ஆர்வத்தோடு கேட்க, அண்ணாமலை பொறுமையாக இருக்குமாறு மனோஜை அடக்குகிறார்.


இறுதியாக நீங்க கொடுத்த எல்லாமே எனக்கு மனசுக்கு நிறைவாய் இருந்துச்சு. ஆனால் முத்துவும் மீனாவும் எனக்கு உணர்வுபூர்வமான கிப்ட் கொடுத்து இருக்காங்க. மீனா என்னுடைய நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு அப்படியே படம் பிடிச்சிருக்கா. முத்து என்னுடைய முப்பது வருஷ ஏக்கத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறான். பணம் காசு விட உறவும் நட்பும் தான் ரொம்ப முக்கியம். அது எனக்கு திருப்பிக் கொடுத்த முத்து மீனாவுக்கு தான் இந்த ஸ்பெஷல் கிப்ட் என சொல்ல, விஜயா ஷாக் ஆகுறார்.

அதன் பின்பு மீனாவிடம் நகையை கொடுத்து தினமும் பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணனும். வருஷத்துக்கு ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு கொண்டு போய் பூஜை பண்ணி எடுத்துட்டு வரணும். எந்த காரணத்தை கொண்டும் இந்த நக குடும்பத்தை விட்டு வெளியே போகக்கூடாது என நிபந்தனைகளோடு நகையை கொடுக்கின்றார். மீனாவும் முத்துவும் நிச்சயமாக இந்த நகையை பாதுகாத்துக் கொள்வோம் என்று வாக்கு கொடுக்கின்றார்கள்.

இதை அடுத்து மீனா ரூமில் கையோடு நகையை வைத்து  நின்று கொண்டிருக்க அங்கு வந்த முத்து பூஜை பண்ணிட்டு நகையை எடுத்து வந்து லாக்கர்ல வச்சுடு. இந்த மனோஜ் நம்பி எந்த நகையும் வெளியில வைக்க முடியாது என்று சொல்லுகிறார்.

மறுநாள் பாட்டி ஊருக்கு கிளம்பியதும் வீட்டுக்கு வந்த முத்து கதவை சாத்தி எல்லாரையும் கூட்டி கவரிங் நகையை மேசை மீது வைத்து இத வச்சு பாட்டிக்கு நகை வாங்கலாம் என்று கடைக்கு போய் இருந்தோம். ஆனால் இது எல்லாமே கவரிங் நகைன்னு சொல்லிட்டாங்க. இது எப்படி மாறுச்சு என்று தெரிஞ்சாகணும் என சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.

அண்ணாமலை உன்னிடம் தானே நகை இருந்துச்சு என்று விஜயாவிடம் கேள்வி கேட்ட, எனக்கு எப்படி தெரியும் அன்னைக்கு கழட்டி கொடுத்ததை பீரோவில் வைத்து இப்ப திருப்பி எடுத்துக் கொடுத்தேன். அப்ப இது எல்லாம் கவரிங் நகையா? தங்கம் இல்லையா என ஒன்றும் தெரியாதது போல முத்து மீனா பக்கம் பழியை திருப்பி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement