நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி, குணச்சித்திரவேடம், வில்லி கேரக்டர் என அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் "மதகஜராஜா" திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. இதன் ப்ரோமோஷன் பேட்டியில் விஷால் பாடிய பாடல் குறித்து சுவாரஷ்யமான பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் வரலட்சுமி, அஞ்சலி நடித்த திரைப்படம் தான் மதகஜராஜா. 2013ல் இருந்து ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த இந்த திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டில் நடிகை வரலக்சுமி விஷால் குறித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் அவர் கூறுகையில் " விஷால் இந்த படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளார். அய்யோ விஷால் பாடிய அந்தப் பாடலை கோரியோகிராஃபி செய்தபோது எங்களுக்கு காதில் ரத்தமே வந்துவிட்டது. பிருந்தா மாஸ்டருக்கெல்லாம் அழுகையே வந்துவிட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து ஸ்பீக்கரில் அதே பாடலைத்தான் கேட்கும் நிலைமை இருந்தது" என்று கூறினார்
மேலும் அந்த பேட்டில் கலந்திருந்த நடிகை அஞ்சலி "அந்தப் பாடல் கேட்டு விஷாலிடம் நீங்களா பாடுனீங்க என்று கேட்க அவர் ஆமாம் என்று சொன்னாரு உடனே ஏன்னு தான் கேட்டேன், ஏன்னா ஒரு பன் இருக்க வேணாமா அதான்" என்று சொன்னார் என அஞ்சலி கூறினார்.
Listen News!