• Dec 26 2024

கல்யாணத்திற்கு முன் ஒரு சக்சஸ் படம்.. 5 மொழி படத்தை நம்பியிருக்கும் வரலட்சுமி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஜூன் அல்லது ஜூலையில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்துக்கு முன்னாள் ஒரு சக்சஸ் படத்தை கொடுக்க வேண்டும் என்று வரலட்சுமி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நடித்து முடித்துள்ள ’சபரி’ என்ற திரைப்படத்தை தீவிரமாக ப்ரமோஷன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலம் என்பதும் குறிப்பாக தெலுங்கு திரையுலகில் அவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் நடித்த ’சபரி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தை ப்ரமோஷன் செய்ய வரலட்சுமி தீவிரமாக இருந்து வருவதாகவும் தெலுங்கு மாநிலங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் எப்படியாவது இந்த படத்தை வெற்றிப்படமாக்கிவிட்டால் திருமணத்தை சந்தோஷமாக முடிக்கலாம் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியானாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆரம்பகட்ட வசூல் இல்லை என்றும் ஆனாலும் அவர் தொடர்ந்து மனம் தவறாமல் ப்ரமோஷன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

மேலும் தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படத்திலும் வரலட்சுமி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அந்த படமும் அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை போல் மலையாளத்தில் ’கலர்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படமும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியோடு திருமணம் செய்து கொள்வார் என்றும் திருமணத்திற்கு முன் ஒரு சக்சஸ் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வரலட்சுமி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement