• Dec 26 2024

தகரம் காலை கிழிச்சிருச்சி கவலையில் ரோபோ சங்கர்... பார்க்கவே பயமா இருக்கு, கவனமா இருங்க டுவிட் வெளியிட்ட வரலக்ஷ்மி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் தற்போது மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்தல் கூறும் வகையில் பல பிரபலங்களும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அதனுடன் மெசேஜ்களையும் பதிவிடுகின்றனர்.


இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் தனது வீட்டு மேல்மாடியில் இருந்து வீடியோ ஒன்றை எடுத்து பதிவு செய்துள்ளார். அதன் அவர் இங்க பாருங்க எப்படி தண்ணி இருக்கு இந்த மழையில் தான் நான் வெளிய போய் சாமான் வாங்கிட்டு வந்தேன். வரும் போது முழங்கால் அளவு தண்ணி அந்த தண்ணில மிதந்து வந்த ஒரு தகரம் என் கால கிழித்து விட்டது. எல்லாரும் வெளிய போகாதீங்க, மத்தவங்களுக்கு உதவி செய்ங்க  என்று வீடியோ ஷேர் பண்ணி இருக்காரு.


அதே போல நடிகை வரலக்ஷ்ய் சரத்குமார் அவர்களும் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ போட்டு இருக்காங்க அதுல என்ன சொல்லி இருக்கிறார் என்றால் எல்லாரும் கவனமா இருங்க , வெளிய போகாதீங்க , பார்க்குறதுக்கே ரொம்ப பயமா இருக்கு , எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுங்க அப்டினு வீடியோ போஸ்ட் பண்ணி இருக்காங்க இவர்களை போல நிறைய பிரபலங்கள் மக்களுக்கு இந்து போன்ற விடையங்களை பதிவு செஞ்சிட்டு இருக்காங்க. 


Advertisement

Advertisement