• Dec 26 2024

"VD 12" முதற்கட்ட படப்பிப்புகள் நிறைவு ! அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கன்னு தெரியுமா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

பெரும் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் "VD 12" திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது.100 கோடி பட்ஜெட் என்ற செய்திகள் வெளியானது படத்திற்கான ஒரு பெரு விளம்பரமாகவே மாறிப் போனது.

Vijay Deverakonda fans disappointed on ...

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் ஸ்பை த்ரில்லர் கதையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஸ்ரீலீலா முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கான இசையை அனிருத் வழங்குவதாக செய்திகள் வெளியானது ரசிகர்களுக்கு போனஸ் கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.

Sree Leela Says No To Ravi Teja And ...

இந்நிலையில் விசாகபட்டினத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு இலங்கை செல்லவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement