• Dec 26 2024

’இந்தியன் 2’: ஒரே ஒரு பாடலுக்கு மிஸ் யுனிவர்ஸ் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? ஷங்கரின் தாராளம்..

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்ட டெமி லே டெபோ என்பவர் நடனமாடினார் என்பதும் இந்த பாடல் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வரும் இந்த பாடல் மட்டும் சுமார் 40 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும் இந்த பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவானதாகவும் கூறப்படுகிறது.



குறிப்பாக இந்த பாடலுக்கு நடனமாடிய மிஸ் யுனிவர்ஸ் டெமி லே டெபோ என்பவருக்கு மட்டும் 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா ஐந்து கோடி ரூபாய் வரை ’புஷ்பா’ படத்திற்கு வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் 10 கோடி என்பது மிக அதிகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த பாடலுக்கு 10 கோடிக்கு தரப்பட்டதா என்பதில் சில சந்தேகமும் அடைகின்றனர். இந்த தகவலை தயாரிப்பாளர் உறுதி செய்தால் மட்டுமே நம்ப முடியும் என்றும் 10 கோடி தரப்பட்டு இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன. இருப்பினும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement