• Dec 26 2024

வெங்கட் பிரபு ஸ்பெஷலாக செய்து வருகின்றார், வெயிட் பண்ணுங்க- தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்த உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவர் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பினாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்துள்ளார். முதன்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.


இந்த 68வது படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்தது. இந்த நேரத்தில் தான் விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்து நிறைய பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.படத்திற்கு பாஸ் என தான் படக்குழு பெயர் வைத்துள்ளதாகவும், புத்தாண்டு அன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் அப்டேட் குறித்து அர்ச்சனா கல்பாத்தி டுவிட் போட்டுள்ளார். அதில் அவர், தற்போது தான் எல்லா டுவிட் பார்த்தேன், உங்களது அன்பிற்கு நன்றி.

ஆனால் பொருமையாக இருங்கள், வெங்கட் பிரபு ஸ்பெஷலான விஷயத்தை செய்து வருகிறார். ஆனால் கண்டிப்பாக பாஸ் கிடையாது என டுவிட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் எப்போது டைட்டிலை அறிவிப்பீங்க எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement