• Dec 26 2024

அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லா இடத்திலும் இருக்கிறது, அவங்க தான் மாறனும்- ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாடகர் விஜய் யேசுதாஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் குறித்து பிரபலங்கள் பலரும் ஓபனாகப் பேசி வருகின்றனர்.அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகை விசித்ரா பிரபல தெலுங்கு நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக ஓபனாகக் கூறி இருந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.  அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. 


இந்நிலையில் பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார். அதாவது, "படத்துக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து எப்படியும் ஒருவரை பயன்படுத்த நினைப்பது தவறு. அது கெட்ட விஷயம் என்று சொல்ல அனைவரும் பயப்படுவார்கள். கிடைத்த வாய்ப்புகள் போய்விடுமோ என்ற பயத்தால் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள். 

நான் ஒரு ஆணாக இருப்பதால் அவ்வளவு கஷ்டப்படுவதில்லை. ஆனால் இந்தத் தொழிலில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை எதிர்க்க முடியாது. இப்போது சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும் ஒருவரால் எப்படி இப்படி உணர முடிகிறது என்று தெரியவில்லை.


இந்த விஷயத்தில் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் மட்டும்தான் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தொழிலையும் குறை சொல்ல முடியாது. இந்தத் துறையில் மட்டும் இல்லை அனைத்து துறையிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஏன் கார்ப்பரேட் துறையில்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சினை இருக்கிறது. மக்கள் மாறுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை" என்றார்.

Advertisement

Advertisement