• Jan 13 2025

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் மீண்டும் தரமான சம்பவம்.? அதிகார்வபூர்வ அறிவிப்பு

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாகவே காணப்படுகின்றன. தனுஷின் முதல் இரண்டு படங்களையும் வெற்றி மாறன் தான் இயக்கியிருந்தார். கடைசியாக இவர்களது கூட்டணியில் வெளியான அசுரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் மீண்டும்  படம் ஒன்று உருவாக உள்ளது. இது தொடர்பான அதிகார்வ பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

d_i_a

வெற்றிமாறனின் முதலாவது படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பணி புரிந்தார். இந்த படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்பு இவர்களுடைய கூட்டணியில் ஆடுகளம் படம் வெளியானது. இந்த படம் சேவல் சண்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இது தமிழ் சினிமாவுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்திற்கும் பல தேசிய விருதுகள் கிடைத்தன.


வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்தும் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.


இவ்வாறான நிலையிலேயே வெற்றிமாறன் - தனுஷ் மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வடசென்னை படத்தில் இரண்டாவது பாகம் வெளியாகும் என காத்துக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு இது அந்தப் படமா என்பது தொடர்பில் எந்த அறிவிப்பும் கூறப்படவில்லை. ஆனாலும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

Advertisement