பிக் பாஸ் சீசன் 8 இறுதி வாரங்களை நெருங்க நெருங்க போட்டியாளர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. அத்தோடு பழைய போட்டியாளர்களின் வருகை டாப் 6 போட்டியாளர்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அது குறித்து பார்ப்போம்.
வெளியாகிய ப்ரோமோவில் சுனிதா " இது எல்லாம் என் கிட்ட வச்சிக்காத நல்லா பண்ணுறீங்க, எதுமே பண்ணாமல் இவ்வளோ தூரம் வந்துட்டிங்க. உங்க ஆர்கானிக் எனக்கு தெரியும். எல்லாம் பறக்கவிட்டுருவேன். பிக்பாஸ் ஷோ உங்களுக்கு புரியல தெரியல" என்று சவுந்தர்யாவை பார்த்து கூறுகிறார்.
இதனை கேட்ட சவுந்தர்யா " இல்ல நீங்க சொல்லுறது புரியல, எதுவுமே பண்ணாம இவ்வளோ தூரம் வரமுடியாது. நான் மக்களை என்டடைன் பண்ணி இருக்கேன். அதுனாலதான் மக்கள் என்னை இங்க உக்கார வச்சி இருக்காங்க" என்று கூறுகிறார். அதற்கு சுனிதா " உங்களுக்கு வோட் பண்ண தெரிஞ்சவங்க சம்மந்தப்பட்டவங்க இருகாங்க எனக்கு யாரு வோட் பண்ணுவா என்று கோபமாக கேட்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பத்தில் இருந்தே சவுந்தர்யா மற்றும் சுனிதாவிற்கு செட்டாகவில்லை ஏதாவது ஒரு சண்டை வந்துகொண்டுதான் இருந்தது. எலிமினேஷன் ஆகி வெளியேறி பிறகு மீண்டும் ரிப்ளேஸ்மென்ட்காக உள்ளே வந்த பின்னரும் சுனிதா சவுந்தர்யா மீது வன்மத்தை காட்டுகிறார். இனி என்ன நடைபெறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!