• Dec 26 2024

வெற்றிமாறன் - சூர்யா இடையே நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை.. ‘வாடிவாசல்’ அவ்வளவு தானா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


வாடிவாசல்படம் குறித்து வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் ஏற்படாத நிலையில், இந்த படம் கைவிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில்வாடிவாசல்என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் சூர்யாவுடன் ஒரு காளை பழக்கமாகி கொண்டு வந்தது என்பது நிஜ காளையை வைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
இந்த நிலையில் சூர்யா மற்றும் அமீர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அமீர் திடீரென இந்த படத்தில் என்ட்ரி ஆனது சூர்யாவுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த படத்தில் சூர்யா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் சமீபத்தில் வெற்றி மாறன் மற்றும் சூர்யா ஆகிய இருவரும்வாடிவாசல்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அமீர் படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சூர்யா  கூறியதாகவும் ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என வெற்றிமாறன் கூறியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்துவாடிவாசல்படத்திலிருந்து தான் விலகி கொள்வதாக சூர்யா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 
இந்த நிலையில்வாடிவாசல்படத்தை தனுஷ் அல்லது வேறு யாரையாவது வைத்து வெற்றிமாறன் இயக்குவாரா? அல்லது அந்த படத்தை முற்றிலும் கை விடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய சூர்யா அவருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement