பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள விடுதலை 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் "விடுதலை 2 திரைப்படம் எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்" என்று குறிப்பிட்டு இயக்குநர் வெற்றிமாறன் ஒரு வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
விடுதலை 2 நாளை ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில் விடுதலை-1 ,விடுதலை-2 திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் விடுதலை-2 திரைப்படம் குறித்து சில விடையங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் " விடுதலை 2 திரைப்படம் வேலைகள் எல்லாம் இப்போதுதான் முடிந்தது. விடுதலை திரைப்படம் ஒரு பெரிய ஜேனி , நிறைய அனுபவங்களை கொடுத்தது" என்று கூறினார்.
d_i_a
மேலும் "படத்தில் வேலை செய்தவர்களின் உழைப்பு தான் இந்த விடுதலை. அதுதான் சக்ஸஸா முடிஞ்சி இருக்கு, இந்த திரைப்படத்திற்காக ஒத்துழைப்பு தந்து சப்போட் செய்த அணைவருக்கும் நன்றி. ஒரு படமா இந்த படம் எப்படி இருக்கு என்பதை பார்வையாளர்களான நீங்க தான் சொல்லணும்" என்று கூறியுள்ளார். நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி,நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் நாளை விடுதலை-2 திரைப்படம் ரிலீசாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#ViduthalaiPart2 From Tomorrow 💥 🔥 💥
pic.twitter.com/UlEb3g8Tw8
Listen News!