• Dec 25 2024

இந்த வாரம் நான் தான் வெளியே போவேன்! ஜாக்குலினுக்கு- தீபக் சொன்ன உண்மை!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தற்போது அநேகமான ரசிகர்களின் விருப்பமான ஷோவாக இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தீபக் "இந்த வாரம் நான் வெளியே போக வாய்ப்பு இருக்கிறது" என ஜாக்குலினிடம் சொல்கிறார். இந்த  வீடியோ வைரலாகி வருகிறது. 


பிக் பாஸ் வீடு தற்போது சூடுபிடித்துள்ளது, போட்டியாளர்களின் ஆட்டமும் வெறியாட்டமாக இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் கார்ட்னிங் ஏரியாவில் தீபக் மற்றும் ஜாக்குலின் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது ஜாக்குலின் "இந்த வாரம் நான் வெளிய போவேனா?" என்று கேட்கிறார். அதற்கு தீபக் "இல்லை இந்த வாரம் போகமாட்ட இந்த வாரம் டிக்கெட்ஜோன் முடிஞ்ச பிறகு தான் வெளியே போவாய்", "சொல்ல முடியாது ஒருவேளை நான் கூட போகலாம். ரொம்ப நாள் கழிச்சி நாமினேஷன்ல வாரேன் மக்கள் கையில இருக்கு எல்லாமே" என்று கூறினார்.


அதற்கு ஜாக்குலின் "அப்படி எல்லாம் நடக்காது உன்னோட கொள்கை புடிச்சவங்க உனக்கு வோட் போடுவாங்க, நீ எழும்பி ஒரு வார்த்தை சொல்லும் போது அவ்வளோ சத்தம் போடுறாங்க அப்போ கட்டாயம் கைவிடமாட்டாங்க வோட் போடுவாங்க" என்று தீபக்கிடம் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் "தீபக் உங்களுக்கு எங்க சப்போட் இருக்கும் கவலை படவேண்டாம், லாஸ்ட் 3 பேருல நீங்களும் இருப்பீங்க" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

Advertisement

Advertisement