• Dec 25 2024

ஒரு மணி நேரம் பேசி விஜய் மனதை மாற்றிவிட்ட வெற்றிமாறன்.. ’தளபதி 69’ கன்பர்ம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69’ படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கிட்டத்தட்ட வெற்றிமாறன் தான் என்று உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், எச் வினோத், வெற்றிமாறன் உட்பட பல இயக்குனர்கள் இருந்த நிலையில் தற்போது வெற்றிமாறனை விஜய் டிக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஒன்லைன் கதையை வெற்றிமாறன் தெரிவித்த நிலையில் சமீபத்தில் அவர் விஜய்யை சந்தித்து ஒரு மணி நேரம் சந்தித்து முழு கதையையும் சொன்னாராம். 

அரசியல் களத்திற்கு இறங்குவதற்கு முன்பு தான் நடிக்கும் கடைசி படத்தின் கதை இப்படி தான் இருக்க வேண்டும் என்றும் தனது அரசியல் எதிர்காலத்துக்கு இந்த படம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் வெற்றிமாறன் கதை சொன்னதிலிருந்து விஜய் புரிந்து கொண்டதை அடுத்து இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. 



தற்போது அவர் விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிவடைந்த உடன் ’தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணியை முடிக்கும் நிலையில் உள்ள வெற்றிமாறன் அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவார் என்றும் இதன் காரணமாக சூர்யாவின் ’வாடிவாசல்’ தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement