• Dec 26 2024

நானும் விசித்ராவும் கடுமையா சண்ட போட்டம்; அவங்க என்கிட்ட மன்னிப்பும் கேட்டாங்க..ஆனா அத காட்டவே இல்ல..! அன்ன பாரதி எமோஷனல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் இந்த வாரம் வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7ல் மாயா, ஐஷுஇ அர்ஜே பிராவோ, மணி, அக்‌ஷயா, அன்ன பாரதி, கானா பாலா,தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கினர். இதில் பலரும் புதிதாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள் தான்.

இந்தநிலையில் வெளியே வந்த அன்னபாரதி பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதன்படி அவர் கூறுகையில்,


அதில் எனக்கு பிக் பாஸ் வீடு ஆரம்பத்தில் புதுமையாக இருந்துச்சு. வெளியே நான் பார்த்த பிக்பாஸுக்கும் உள்ளே நான் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்துச்சு. என்னடா இது கேமராவுக்காக இப்படி நடிக்கிறாங்களேன்னு தோணுச்சு. நான் கொஞ்சம் சாப்ட்டானா நபர். என்னுடைய அடிப்படை குணமும் கூட அதுதான். கேமராவுக்காக மெனக்கட்டு ஒரு விஷயம் பண்ண மாட்டேன். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சிலர் அப்படி எல்லாம் கிடையாது. கேமரா அட்டென்ஷனுக்காக சிலர் வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பல நிகழ்வுகள் வெளியே காட்டப்படாமல் இருந்திருக்கிறது. நான் பிக்பாஸ் வீட்டிற்குள் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் உள்ளே சென்ற சில நாட்களிலேயே எனக்கும் விசித்திராவிற்கும் பெரிய சண்டை வந்தது.அது ப்ரோமோவில் கூட காட்டவில்லை. எபிசொட்டிலும் அது காட்டியதாக தெரியவில்லை.அவர் பட்டிமன்ற தொழிலை குறித்து இளக்காரமாக பேசி இருந்தார். அதனால் நான் கடுமையாக விசித்திராவிடம் சண்டை போட்டு இருந்தேன். அதற்கு விசித்திரா பிறகு இதனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அதுவெல்லாம் வெளியே காட்டப்படவே இல்லை. 

மேலும், வெளியே இருக்கும் போது பார்க்கிற பிக்பாஸ் வேற உள்ளே எல்லோரும் பிளான் பண்ணி தான் விளையாடுறாங்க. லவ் கன்டென்ட், சண்டேன்னு அவங்க அவங்க குரூப் சேர்ந்து விளையாடிகிட்டு இருக்காங்க என்றும் அந்த பேட்டியில் அன்னபாரதி பேசியிருக்கிறார். 

Advertisement

Advertisement