• Dec 26 2024

அரசனை நம்பி புருஷனை கைவிட்டார் போல... நயன் வெற்றிக்கு தடையே இவர்தான்... ஆசை காட்டி மோசம் செய்தார் விக்கி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சினிமா பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. தென்னிந்திய ஹீரோக்கள் அடுத்தடுத்து படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டாலும், நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. அதற்க்கு இதுதான் காரணம் என சினிமா வட்டாரங்கள் சில விஷயங்களை கசியவிட்டு வருகின்றன.  


தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் படங்களில் த்ரிஷாவை புக் செய்தது நயன்தாராவுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் படத்தில் ஜெயித்து காட்டவேண்டும் என நயன்தாரா  பிளான் செய்துள்ளார் போல அந்த பிளானுக்கு ஏற்றவாறு ஜவான் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது நயன்தாராவின் கைவசம் இரண்டு பாலிவுட் படங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகும்.


நயனின் பாலிவுட் பிரவேசத்துக்கு இடைஞ்சலாக இருப்பதே விக்னேஷ் சிவன் தான் என கூறப்படுகிறது காரணம் நயன் ஆரம்காலங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தாலும், அடுத்தடுத்து தனக்கான கேரக்டர்களில் கண்ணியமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பாலிவுட் படம் என்று வந்ததும் ஜவான் படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்ட ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்பு வந்தால் இது எல்லை மீறும் என விக்னேஷ் சிவனுக்கு பயம் வந்துவிட்டது.


நயன்தாராவை நடிப்பிலிருந்து திசை திருப்ப விக்னேஷ் சிவன் போட்ட பிளான் தான் இந்த பிசினஸ் எல்லாம். 9 ஸ்கின் என்னும் பெயரில் அழகு சாதன பொருட்களை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் தொடங்கினார்கள். அதை தொடர்ந்து டிவைன் ஃபுட்ஸ், பெமி 9 நாப்கின் என தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தி நயன்தாராவிற்கு ஆசையை காட்டினார் விக்கி.


நடிகை நயன்தாராவுக்கு இப்போதைக்கு அன்னபூரணி என்ற தமிழ் படம் கைவசம் இருக்கிறது. அதை தொடர்ந்து கமலஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. பிஸ்னஸ் நம்பி சினிமா கேரியரை விட்டு விடுவார் போல நயன். 

Advertisement

Advertisement