• Dec 26 2024

நயன்தாரா சாபத்தால் தான் இவ்வளவு பிரச்சனை.. ’விடாமுயற்சி’ குறித்து புலம்பும் லைக்கா..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த ’விடாமுயற்சி’ என்ற படத்திற்கு விடாமுயற்சி என்று எப்போது பெயர் வைத்தார்களோ அப்போது இருந்தே இந்த படத்தை முடிக்க விடாமுயற்சியுடன் லைக்கா நிறுவனம் தீவிரமாக போராடி வருகிறது.

அஜித் தேதி கொடுக்க தயாராக இருந்தாலும் மகிழ்திருமேனியும் படப்பிடிப்பு நடத்த தயாராக இருந்தாலும் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படத்தை லைக்கா நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித் என பல படங்களுக்கு பூஜை போட்டதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விட்டதாகவும் அதுமட்டுமின்றி ’லால்சலாம்’ படமும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதால் தற்போது லைக்கா நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் நயன்தாரா விடுத்த சாபம் தான் ’விடாமுயற்சி’ படத்திற்கு தடங்கல்கள் வந்து கொண்டிருக்கிறது என்றும், பேசாமல் விக்னேஷ் சிவனையே இந்த படத்தை இயக்க வைத்திருந்தால் இந்நேரம் படம் முடிந்து ரிலீஸ் ஆகியிருக்கும் என்று கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக  இருந்து அதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே டிராப் செய்யப்பட்டது என்பதும் லைக்கா நிறுவனத்திடம் நயன்தாரா எவ்வளவோ பேசி பார்த்தும் லைக்காவும் அஜித்தும் அந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அதனை அடுத்து அவர் விடுத்த சாபம் தான் தற்போது லைக்கா நிறுவனத்தையும் அஜீத்தையும் போட்டு ஆட்டி வைக்கிறது என்றும் லைக்கா நிறுவனத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement