• Jan 12 2025

விஜய்யை சீண்டும் அமீர்? கொதித்தெழும் ரசிகர்களுக்கு தளபதி போட்ட முக்கிய உத்தரவு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இயக்குனர் அமீர் சமீபத்தில் ’உயிர் தமிழுக்கு’ படத்தின் ப்ரமோஷனில் விஜய்யை சீண்டி இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் கொதித்திருப்பதாகவும் ஆனால் ரசிகர்களுக்கு விஜய் ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்து இப்போதைக்கு எதுவும் வேண்டாம், அமைதியாக இருங்கள் என்று அடக்கி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அமீர் நடித்த ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் ப்ரோமோசனின் போது அவர் மீண்டும் இயல்பாக பேச தொடங்கிவிட்டார் என்பதும் சில கேள்விகளை அவர் பத்திரிகையாளர்களிடம் கேட்டது பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜாபர் சாதிக்கிற்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று உங்களுக்கு ஒருபோதும் சந்தேகம் வரவில்லையா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க இதே கேள்வியை லைக்கா நிறுவனத்திடம் போய் கேட்பீர்களா? அந்த நிறுவனத்தின் பின்னணி பற்றியும் விஜய் படங்களை அவர்கள் தொடர்ந்து எடுப்பதை படுத்தியும் யோசித்தீர்களா? என்று பதில் கேள்வி கேட்டார்.

அது மட்டும் இன்றி விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்தும் அமீர் ஆவேசமாக சில கருத்துக்களை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது ’உயிர் தமிழுக்கு’ படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய்யை அவர் சீண்டி இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருதி சமூக வலைத்தளங்களில் ரியாக்ஷன் செய்ய, இப்போதைக்கு எந்த பெரிய ரியாக்சனும் வேண்டாம் என்று மன்றத்தினருக்கு விஜய் கறார் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் கண்டிப்பாக ஒரு காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement