• Apr 07 2026

அனிருத்தை மண்டியிட்டு வணங்கிய விக்னேஷ் சிவன்.. எதற்காகத் தெரியுமா.?

shali / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்தப் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் இசைக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், இப்படத்திற்கு இசையமைத்த அனிருத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த கூட்டணி மீண்டும் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

படம் வெளியாகும் முன்பே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, இளைஞர்களின் மனதில் இடம்பிடிக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement