• Dec 25 2024

மாநாட்டிற்கு சென்ற 4 பேர் பலி!இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த விஜய்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது குறித்த மாநாட்டில் விஜய் மிகவும் சுறுசுறுப்பாக உரையாற்றி அனைவரையும் கதிகலங்க வைத்தார் பாரிய போலீஸ் பாதுகாப்புடன் ஆரம்பமாகிய இவ் மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.மற்றும் இம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80 இற்கும் மேற்பட்ட  மக்கள் மயக்கமடைந்து விழுந்ததாகவும் விபத்துக்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுமட்டுமல்லாமல் குடி நீர் வசதியின்மையின் காரணமாக கழிவு நீரினை மக்கள் அருந்தியதாகவும் செய்தி பரவி வருகின்றது.


அது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் உயிரிழந்த தொண்டர்களிற்கு விஜய் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் குறித்த இரங்கல் செய்தியில் "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர் திரு, கில்லி V.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்திரு. உதயகுமார், கழகத் தோழர், செஞ்சி திரு. வசந்தகுமார், கழகத் தோழர் பாரிமுனை, சென்னைதிரு.சார்லஸ் கழகத் தோழர். வில்லிவாக்கம், சென்னைதிரு. ரியாஸ், கழகத் தோழர், பாரிமுனை, சென்னை.ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."என குறிப்பிட்டுள்ளார் .

Advertisement

Advertisement